சென்னை: நடிகர் விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் 64வது படமான மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மலையாள நடிகையான மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
அதோடு விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், விஜே ரம்யா, அர்ஜூன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரலில் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இந்நிலையில் விஜயின் 65வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக இயக்குநர்கள் மகிழ்திருமேனி, பாண்டிராஜ், சுதா கொங்கரா, ஏஆர் முருகதாஸ் உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபட்டன.
இந்நிலையில் விஜயின் 65வது படத்தை இயக்கபோவது இயக்குநர் ஏஆர் முருகதாஸுதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏஆர் முருகதாஸ் கடைசியாக விஜயை வைத்து சர்க்கார் படத்தை இயக்கினார்.
தற்போது தளபதி 65 படத்துக்கான கதையின் ஒரு வரியை மார்ச் மாத தொடக்கத்தில் தெரிவித்ததகாவும் அதனைக் கேட்ட நடிகர் விஜய் முழுக்கதையையும் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முழுக்கதையையும் நடிகர் விஜய் விரைவில் கேட்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Source :Tamil.filmibeat (https://tamil.filmibeat.com)
Comments