சென்னை: தங்களை பற்றி மற்ற போட்டியாளர்களுக்கு சொல்லும் டாஸ்க்கில் சனம் ஷெட்டி தனக்கு நேர்ந்த விபத்து குறித்து கூறியது பலரையும் உருக செய்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்கிற சந்தோஷமான செய்தியை சும்மா கிழி பாடலுக்கு நடுவே பிக் பாஸ் கூறி போட்டியாளர்களை குஷிப்படுத்தினார்.
முதலாவதாக நாட்டுப்புற பாடகர் வேல் முருகன் இந்த டாஸ்க்கில் தன்னை பற்றியும் தான் வளர்ந்து வந்தது. ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கஷ்டப்பட்டதையும், அப்துல் கலாமிடம் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றது குறித்தும் கூறி, அம்மா பற்றி பாடல் பாட, அனைத்து போட்டியாளர்களும் தாரை தாரையாக கண்ணீர் சிந்தி அழுதனர். மாடியில் இருந்து விழுந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆடல் பாடல் இல்லாமல் நடந்தபடியே வந்த சனம் ஷெட்டியை பார்த்து, கமல்ஹாசன் அவருக்கு நடந்த ஒரு பிரச்சனை குறித்து மறைமுகமாக கூறினார். சனம் ஷெட்டிக்கு அப்படி என்ன பிரச்சனை என ரசிகர்கள் குழம்பித் தவித்த வேளையில், இந்த டாஸ்க்கில் தான் மாடியில் இருந்து கீழே விழுந்த விஷயத்தை கூற அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் ஷாக்கானார்கள். காப்பாற்றிய ஆட்டோக்காரர் மாடியில் இருந்து 22 அடி உயரத்தில் ஸ்டன்ட் ஒன்றை செய்யும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துட்டேன். வேலிக்காக போடப்பட்ட ஃபென்ஸ் கம்பிகளில் மாட்டி சுமார், 2 மணி நேரம் தவித்துக் கிடந்தேன். யாருமே வந்து உதவி பண்ணாத நிலையில், ஆட்டோக்காரர் ஒருவர் ஓடி வந்து உதவி செய்து, என்னை மருத்துவமனையில் சேர்த்தார் எனக் கூறும்போது, ஷிவானி, கேப்ரில்லா உள்ளிட்ட ஹவுஸ் மேட்ஸ் கண்கள் குளமாக மாறியது. பாத்ரூம் பேன் உசுரு போய் உசுரு வந்தது போல அந்த விபத்தில் இருந்து பிழைத்து வந்தேன். என்னை என்னோட அப்பா அம்மா தான் பார்த்துக்கிட்டாங்க, இந்த வயசுல பாத்ரூம் பேன் எல்லாம் அவங்க மாத்திவிட்டதை இப்ப நினைச்சாலும் என தனது வலிகளை முதல் முறையாக சனம் வெளிப்படுத்த வெளிப்படுத்த அவர் மீது பலருக்கும் மரியாதை அதிகரித்தது. ஜித்தன் ரமேஷ் எல்லாம் ரொம்பவே ஃபீல் பண்ணார். அம்மா அப்பா தான் காதலர் தர்ஷனை பிரிந்த நிலையில், சனம் ஷெட்டி, இந்த விஷயத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, இந்த உலகத்துலயே நமக்கு ஒண்ணுனா அம்மா அப்பா தான் வருவாங்க, வேற யாருமே வரமாட்டாங்க என நெகிழ்ந்த தருணங்கள் இரண்டாம் நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொன்னான தருணங்களாக மாறின.
Comments