சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தின் ஹாட் டீசரை நடிகர் ஆர்யா வெளியிடுகிறார்.
இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்துள்ளனர்
அந்த மாதிரி படம்
ஹாரர் காமெடி எனும் பெயரில் அந்த மாதிரி அடல்ட் படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார். அவர் இயக்கிய ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து படங்கள் இளைஞர்கள் மத்தியில் ஹிட் அடித்த நிலையில், மூன்றாவது படத்தை ரிலீஸ் பண்ண ரெடியாகி விட்டார். அவரே ஹீரோ சந்தோஷ் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களிலும் நாயகனாக நடித்த கெளதம் கார்த்திக், மூன்றாவது படத்தில் நடிக்கவில்லை என மறுத்த நிலையில், ஏகப்பட்ட ஹீரோக்களை அணுகியுள்ளார் இயக்குநர் சந்தோஷ். அடல்ட் படத்தில் நடித்தால், ஃபேமிலி ஆடியன்ஸ் போய்விடுவார்கள் என எண்ணிய ஹீரோக்கள் கை விரிக்க, கடைசியாக அவரே ஹீரோ ஆகிவிட்டார். 4 நாயகிகள் பெரிய வாழைப் பழத்துடன் படு ஆபாசமாக ஹீரோ சந்தோஷ் மற்றும் காமெடியன் பிக்பாஸ் டேனி இருக்கும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடுவே பிகினியில் மிரட்டும் நடிகை மீனள் உடன் சேர்த்து மொத்த 4 நாயகிகள் இந்த படத்தில் கவர்ச்சிக் காட்டி மிரட்டி உள்ளனர். கரிஷ்மா, ஆக்ரித்தி மற்றும் ஷாலு ஷம்முவின் அதகளத்தை ரசிகர்கள் சீக்கிரமே கண்டு ரசிக்க உள்ளனர். ஹாட்டஸ்ட் டீசர் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகளையும், இளைஞர்கள் மத்தியில் ஆதரவையும் பெற்ற நிலையில், நாளை ஹாட்டான டீசர் வெளியாகப் போகும் அறிவிப்பு தற்போது அசத்தலாக வெளியாகி உள்ளது. இயக்குநர் சந்தோஷ் வெளியிட்ட அந்த புரமோ தற்போது டிரெண்டாகி வருகிறது. உள்ளாடைகள் பறக்க பெட்ரூமில் இருந்து உள்ளாடைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்து விழுவது போல, தற்போது வெளியாகி இருக்கும் ஹாட் புரமோவை பார்த்த ரசிகர்கள், கடைசியில் பெரிய பல்ப் ஒன்றை வாங்குவது நிச்சயம். அது என்ன என்பதை அந்த புரமோவை பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள், சர்ப்ரைஸை உடைக்க விரும்பவில்லை. டீசரை வெளியிடும் ஆர்யா கெளதம் கார்த்திக் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்கே கேவலமாக திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்நிலையில், நடிகர் ஆர்யா, அந்த ஹாட்டான டீசரை வெளியிட துணிந்து தாமாக முன் வந்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு ரிலீசாகவுள்ள இரண்டாம் குத்து டீசரில் எத்தனை உள்குத்துகள் இருக்கப் போகிறதோ, நடிகர் ஆர்யாவின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
Comments