WATCH NOW Click Me
top of page

ஹிப்ஹாப் ஆதியின் நான் ஒரு ஏலியன்.. புதிய ஆல்பம் சாங்!

சென்னை : தமிழ் திரையுலகிற்கு ஹிப்ஹாப் கலாச்சாரத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய ஹிப்ஹாப் ஆதி, ஆரம்ப காலத்தில் பல மேடைகளில் ஹிப்ஹாப் பாடல்களைப் பாடி வந்த நிலையில் தற்போது தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத திரை பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் உள்ளிட்ட பன்முகங்க திறமைகளை கொண்ட ஹிப்ஹாப் ஆதி நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு ஆல்பம் சாங் ஒன்றை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட உள்ளார்.



ஹிப் ஹாப் ஆதியின் முதல் ஹிப்ஹாப் பாடல் பாடியது முதல் இன்றுவரை தொடர்ந்து ஆதரவளித்து வரும் "ட்ரெண்ட் மியூசிக்" நிறுவனம் தற்பொழுது இந்த பாடலையும் மிகப் பெருமையுடன் வெளியிட உள்ளது.


ட்ரெண்ட் மியூசிக்

2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்' ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹாப்' எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான்.


தென்னிந்தியாவில் ஹிப்ஹாப்

திரையிசை கோலோச்சிய காலத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சுதந்திர இசை ஆல்பமான ‘ஹிப்ஹாப் தமிழன்' ஏற்படுத்திய அதிர்வுகள் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் ‘ஹிப்ஹாப்' எனும் சொல், இசையின் ஒரு வகையாகக் கொள்வதைவிட ஒரு கலைஞரை குறிக்கக் கூடியதாகவே மாறிவிட்டது.


திரைப்படங்கள் சாராத

சமகாலத்தில் உலகின் மிகப்பெரும் தமிழ் ராப் இசைக் கலைஞராக திகழ்வதற்கு மேலாக, வெற்றிகரமான நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியராகவும் ‘ஹிப்ஹாப் தமிழா' புகழ்பெற்றுள்ளார். வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்' (Naa oru Alien) ஆல்பம் மூலமாக அவர் மீண்டும் களமிறங்குகிறார்.


பல்வேறு மொழிகளில்

இவ்வாறு ஆல்பம் பாடல்களின் மூலம் மிகப் பிரபலமாக தமிழ் திரைத்துறையில் வலம் வர ஆரம்பித்த ஹிப் ஹாப் ஆதி, இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். அதுவரை தனது ஆல்பம் பாடல்களின் மூலம் மட்டும் ரசிகர்களை ரசிக்க வைத்து வந்த இவர், ஆம்பள திரைப்படத்திற்கு பிறகு பல்வேறு திரைப்படங்களுக்கு பல்வேறு மொழிகளில் தனது தனித்துவமான ஹிப் ஹாப் இசையின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார்.



"நான் ஒரு ஏலியன்" ஆல்பம் பாடலை

தமிழ் திரைப்படங்களில் மட்டும் இசையமைத்து வந்த ஆதி தற்பொழுது தெலுங்கு திரைப்படத் துறையிலும், தனது ஹிப் ஹாப் இசையின் மூலம் பிரபலமாகி வருகிறார். இவ்வாறு மொழி பேதம் கடந்து அனைவரையும் தொடர்ந்து ரசிக்க வைத்து வரும் ஆதி தற்பொழுது "ட்ரெண்ட் மியூசிக்" நிறுவனத்துடன் இணைந்து "நான் ஒரு ஏலியன்" என்ற திரைப்பட சாராத ஆல்பம் பாடலை


ஆகஸ்ட் 15ஆம் தேதி

தற்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் அனைவருக்கும் புரியும் எளிமையான பாடல் வரிகளை தனது வித்தியாசமான இசையை கலந்து தொடர்ந்து ரசிக்க வைத்த வரும் ஹிப் ஹாப் ஆதியின் இந்த "நான் ஒரு ஏலியன்" சுதந்திர தின சிறப்பு ஆல்பம் பாடல் ஆகஸ்ட் 15ஆம் தேதி ட்ரெண்ட் மியூசிக்கில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.


Source :Tamil.filmibeat (https://tamil.filmibeat.com)

0 comments

Related Posts

See All

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page