என் மீது நம்பிக்கை வைத்து 'மன்மதனை' இயக்க சொன்னவர்.. தயாரிப்பாளர் மறைவு.. நடிகர் சிம்பு உருக்கம்!
சென்னை: நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம் என்று பிரபல தயாரிப்பாளர் மறைவுக்கு , இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிம்பு கூறியுள்ளார். தனுஷ், சாயாசிங் நடித்து சூப்பர் ஹிட்டான படம், திருடா திருடி. இதைத் தயாரித்தவர், கிருஷ்ணகாந்த்.
படத்தை சுப்ரமணியம் சிவா இயக்கி இருந்தார். இதில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.
சிம்புவின் மன்மதன் :
சிம்புவின் மன்மதன் இந்தப் படத்தை அடுத்து, சிம்பு, ஜோதிகா, கவுண்டமணி, சிந்து துலானி நடித்த மன்மதன் படத்தை கிருஷ்ணகாந்த் தயாரித்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. விக்ரம் நடித்த கிங், துஷ்யந்த் நடித்த மச்சி, தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.
மருத்துவமனை :
ஆரம்பத்தில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் பல படங்களில் மானேஜராக பணியாற்றியவர் கிருஷ்ணகாந்த். இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு வயது 52.
திரையுலகம் அதிர்ச்சி
இதையடுத்து திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவர் மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த கிருஷ்ணகாந்துக்கு லட்சுமி என்ற மனைவியும் சந்திரகாந்த், உதயகாந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவர் இறுதிச்சடங்கு இன்று மாலை ஏவி.எம் ஸ்டூடியோ பின்புறம் உள்ள இடுகாட்டில் நடக்கிறது.
இதையடுத்து திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவர் மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த கிருஷ்ணகாந்துக்கு லட்சுமி என்ற மனைவியும் சந்திரகாந்த், உதயகாந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவர் இறுதிச்சடங்கு இன்று மாலை ஏவி.எம் ஸ்டூடியோ பின்புறம் உள்ள இடுகாட்டில் நடக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து மன்மதன் படத்தை இயக்கச் சொன்னவர். நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க, இயக்குங்க என்று என்னை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட நல்ல மனிதர். அவர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலங்க வைத்துள்ளது.
அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மடியில் அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும். இவ்வாறு நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். மேலும் சில சினிமா துறையினரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
コメント