சென்னை: அன்புள்ள கில்லி படத்துக்காக நாய் ஒன்றுக்கு பிரபல நடிகர் சூரி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கும் படம், அன்புள்ள கில்லி. நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா, ஹீரோவாக நடிக்கிறார்.
துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடிக்கின்றனர்.
நாயின் மனக்குரல்
அரோல் கரோலி இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீதர் சாகர், மாலா தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடிக்கிறது. கில்லி என்ற பெயர் கொண்ட லாபர்டார் வகை நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது மாதிரி கதை உருவாக்கப்பட்டுள்ளது.
காமெடி நடிகர் சூரி
அந்த நாயின் குரலாக, காமெடி நடிகர் சூரியின் குரல் படத்தில் இடம்பெறுகிறது. சூரி, நாய்க்கு குரல் கொடுத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஶ்ரீநாத் ராமலிங்கம் கூறும்போது, இதுவரை வெளியான மனிதன், நாய் உறவு தொடர்பான கதைகளிலிருந்து வித்தியாசமான படமாக இது இருக்கும். சிறப்பான அம்சத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்றார்.
அறிமுகமான குரல்
சூரி, டப்பிங் பேசியது பற்றி கூறும்போது, நாயின் கேரக்டருக்கு, ரசிர்களுக்கு நன்றாக அறிமுகமான ஒருவரின் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். இதுபற்றி ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியமிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்தான் நடிகர் சூரியின் பெயரை குறிப்பிட்டார்.
சம்மதித்தார்
அவருக்கு நன்றாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் கேட்டோம். இந்தப் படத்தின் ரஷ்சை பார்த்தார். அது அவருக்குப் பிடித்திருந்தது. பல நடிகர்கள், விலங்குகளுக்குக் குரல் கொடுக்க தயங்குவார்கள். ஆனால் சூரி உடனே சம்மதித்தார். லயன் கிங் போன்ற படங்களுக்கு நடிகர்கள் குரல் கொடுத்திருப்பதையும் அவர் சொன்னார்.
டப்பிங்
மகிழ்ச்சியுடன் ஜாலியாக அவர் ஸ்டைலில் டப்பிங் பேசி முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாய் நடிக்கும் காட்சிகளுக்காக, யுவன் சங்கர் ராஜாவும் ஆண்ட்ரியாவும் இணைந்து, டூயட் பாடல் ஒன்றையும் பாடியுள்ளனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும் என்கிறார் ஶ்ரீநாத் ராமலிங்கம்.
Commentaires